Homeசெய்திகள்சினிமாவிநாயகர் சதுர்த்தி: "விதை விநாயகர்" சிலையை வைத்து வழிபடுங்கள்! - நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி: “விதை விநாயகர்” சிலையை வைத்து வழிபடுங்கள்! – நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

-

- Advertisement -

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விதைகளால் ஆன விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

we-r-hiring

இயற்கை விநாயகர் சிலை அறிமுகம் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தோஷ் குமார், இந்த ஆண்டு முற்றிலும் இயற்கையான முறையில் விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளார். இச்சிலையை நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

வீட்டிலேயே கரைத்து செடி வளர்க்கலாம்! நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது:

“கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பினர் விதைகளால் ஆன மிக அழகிய விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர். இச்சிலைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்த பின்னர், அவரவர் வீடுகளிலேயே தண்ணீரைக் ஊற்றி கரைக்கலாம்.

அப்படி கரைக்கப்படும் இடத்தில் செடிகள் முளைக்கும். இது விநாயகரின் ஆசீர்வாதம் நமக்கு நேரடியாகக் கிடைப்பதைப் போன்றதாகும். எனவே, இம்முறை அனைவரும் ‘விதை விநாயகரை’ வைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்.”

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பு இதுவரை இந்தியா முழுவதும் 20 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே திரையில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா, சுதீப்: தெறிக்கவிடும் பிக்பாஸ் புதிய புரமோ!

MUST READ