- Advertisement -
இந்தியாவில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னனி வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷர்மா. ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் உள்பட டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
