விஷால் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.
விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதை தொடர்ந்து விஷால்தானது 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனமும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்க இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விஷாலின் 34 வது படம் தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் மற்றும் ஹரி இருவரின் கூட்டணி ஏற்கனவே தாமிரபரணி பூஜை உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.