விஷாலின் மகுடம் பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷால் கடைசியாக ‘மதகஜராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து இவர், ‘ஈட்டி’ படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் தனது 35வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மகுடம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையில் இதன் படப்பிடிப்பும் சென்னை போன்ற பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும், அடுத்தது தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்த படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.