நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக உருவாகியிருந்த மதகஜராஜா எனும் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதேசமயம் நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் இவர் துப்பறிவாளன் 2 திரைப்படத்தையும் தானே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் மதகஜராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது விஷாலின் நிலைமையை பார்த்து பலரும் கண் கலங்கினர். இது தொடர்பாக விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதனால் அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்களும் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே நடிகர் விஷால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விஷாலின் இந்த நிலைமையை பற்றி அறிந்த அவரது நண்பரும் நடிகருமான ஆர்யா மும்பையில் இருந்து விஷாலை பார்க்க ஓடோடி வந்துள்ளார். அப்போது ஆர்யா, நடிகர் விஷாலை முதலில் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளார். இப்போது நடிகர் விஷால், ஆர்யா மற்றும் மற்ற நண்பர்களுடன் ஜாலியாக பேசி தனது நேரத்தை செலவிட்டு வருகிறாராம். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விஷாலின் ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து ஏற்கனவே அவன் இவன் , எனிமி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.