Homeசெய்திகள்சினிமாசந்திரமுகி 2 உடன் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் விஷால்... 'மார்க் ஆண்டனி' ரிலீஸ் அப்டேட்!

சந்திரமுகி 2 உடன் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் விஷால்… ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டீசர், 2 மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

MUST READ