விஷால் தான் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு தானே 3 மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.
தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் விஷால் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க போராடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்து வர்மா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மார்க் ஆண்டனி தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் பல கெட்டப்களில் காணப்படுகின்றனர்.
Teaser Dubbing in 3 languages for #MarkAntony
Puratchi Thalapathy #Vishal@Adhikravi @iam_SJSuryah @vinod_offl @riturv @gvprakash@thinkmusicindia @HariKr_official @ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/sceSem3RMO— RIAZ K AHMED (@RIAZtheboss) May 6, 2023
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் விஷால் 3 மொழிகளுக்கும் தானே டப்பிங் பேசியுள்ளார். அந்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அனைத்து மொழிகளுக்கும் அந்தந்த நடிகர்களே டப்பிங் பேசுவது அதிகமாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் 6 மொழிகளுக்கும் விக்ரமே டப்பிங் பேசினார். அதுபோல தற்போது விஷால் தானே 3 மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.