Homeசெய்திகள்சினிமாவில்லாதி வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா - மற்றுமொரு மிரட்டல் அப்டேட்!

வில்லாதி வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா – மற்றுமொரு மிரட்டல் அப்டேட்!

-

எஸ் ஜே சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஏற்கனவே ஸ்பைடர், மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மாஸ் காட்டியிருந்தார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு இடையே நடக்கும் மோதல்களை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸுக்கு வில்லனாக நடிக்கிறார்.

இதற்கிடையில் இயக்குனர் சங்கர் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த இரண்டு படங்களிலுமே எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே ‘ஆளவந்தான்’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கிறார் என்பது இந்த படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது
எனினும் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் ‘தளபதி 68’ படத்திலும் விஜய்க்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

MUST READ