Homeசெய்திகள்சினிமா‘நான் மகான் அல்ல’ படத்துல நான் நடிக்க வேண்டியது, ஆனா… வருத்தம் தெரிவித்துள்ள விஷ்ணு விஷால்!

‘நான் மகான் அல்ல’ படத்துல நான் நடிக்க வேண்டியது, ஆனா… வருத்தம் தெரிவித்துள்ள விஷ்ணு விஷால்!

-

‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் நடிக்க வேண்டியது ஆனால் தவிர விட்டுவிட்டேன் என்று விஷ்ணு விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்தியின் சினிமா கேரியேரில் ஆரம்ப கட்டத்தில் ‘நான் மகான் அல்ல’ படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் ‘நான் மகான் அல்ல’ படத்தில் தான் நடிக்க வேண்டியது. ஆனால் தவற விட்டு விட்டேன் என்று தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் துவங்கினார். அதை எடுத்து அவருக்கு இரண்டாவதாக நான் மகான் அல்ல படத்தின் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதை அவர் தவற விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவருடைய பதிவில்
“நான் மகான் அல்ல எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று…
வெண்ணிலா கபடி குழுவுக்குப் பிறகு சுசீந்திரன் சாருடன் எனது இரண்டாவது படமாக நான் செய்வதாக இருந்தது. படம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது. ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.
சில சமயங்களில் இது என்னுடைய இரண்டாவது படமாக எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ