- Advertisement -
தமிழ் திரையுலகில் இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கி வளர்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை வைத்து 3 படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம ஆகினார். இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டப்பிங் பணிகள் மற்றும் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன.




