spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉடற்பயிற்சி செய்யும் போது தாடையில் ஏற்பட்ட காயம்... அதிர்ச்சி தகவல் பகிர்ந்த விஜே ரம்யா!

உடற்பயிற்சி செய்யும் போது தாடையில் ஏற்பட்ட காயம்… அதிர்ச்சி தகவல் பகிர்ந்த விஜே ரம்யா!

-

- Advertisement -

உடற்பயிற்சி செய்யும்போது விஜே ரம்யா தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜே ரம்யா சுப்பிரமணியம் தமிழ் சினிமா உலகில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர். அதுமட்டுமில்லாமல் அவர் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவரும் கூட. இதற்காகவே தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி உடற்பயிற்சி செய்வது உடலை எப்படி ஃபிட் ஆக வைத்துக் கொள்வது உள்ளிட்ட டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் தான் புதிதாக ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டபோது அதிக எடையை வைத்து செய்ததால் தாடையில் மோதி தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக ஒரு உடற்பயிற்சி செய்யும் போது அதிக எடையை வைத்து செய்யக்கூடாது என்ற பாடத்தை தான் கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜே ரம்யா தனது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

MUST READ