‘VJS 52’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஜா திரைப்படம் வெளியானது. விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி தனது 51 வது படமான ஏஸ் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்றமே மாதம் 23ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. இது தவிர ட்ரெயின், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 52 வது திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். தற்காலிகமாக VJS 52 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க அவருடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Locked & loaded! 🎧
We’re thrilled to bag the audio rights for #VJS52 — a @Music_Santhosh musical! 🎉🎹
and trust us, we’re only getting started. Title Teaser drops TOMORROW at 6PM, StayTuned ❤️🔥#MusicOnThinkMusic @VijaySethuOffl @MenenNithya @pandiraj_dir @mynnasukumar… pic.twitter.com/2z7e3WD4fC
— Think Music (@thinkmusicindia) May 2, 2025
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இன்று (மே 3) மாலை 6 மணி அளவில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.