STR 49 படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர், STR 49, STR 50, STR 51 ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 49 படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம், கயடு லோஹர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்த படமானது கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
#SilambarasanTR arrived 🔥#STR49 pooja pic.twitter.com/HhB0f7JTDP
— Movie Tamil (@MovieTamil4) May 3, 2025
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (மே 3) சிறப்பாக நடந்துள்ளது. இந்த பூஜையில் நடிகர் சிம்பு வேஷ்டி சட்டையில் வந்துள்ளார். சந்தானம், விடிவி கணேஷ், கயடு, சாய் அபியங்கர், ஆகாஷ் பாஸ்கரன் போன்றோரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.