VJS 52 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது 51வது படமான ஏஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 52 வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்காலிகமாக VJS 52 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படமானது காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
A Cute glimpse of whats coming your way!🥳 #VJS52 Title teaser from today 6PM🕧
Brace yourselves for a rugged love story😆@VijaySethuOffl @MenenNithya @pandiraj_dir @Music_Santhosh @thinkmusicindia @mynnasukumar @PradeepERagav @Veerasamar @onlynikil pic.twitter.com/LTNtVT3Zkj
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 3, 2025

மேலும் இன்று (மே 3) மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் டப்பிங் பேசும் க்யூட்டான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.