spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு.... விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா!

பழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு…. விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா!

-

- Advertisement -

நடிகர் விஜய் தேவரகொண்டா, பழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.பழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு.... விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தற்போது கிங்டம் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற மே மாதம் 30ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதோடு இந்த படத்தை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.பழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு.... விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா! இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரெட்ரோ படம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பழங்குடியின மக்கள் குறித்து அவதூறாக பேசி இருந்தார். இவருடைய இந்த சர்ச்சை பேச்சுக்கு தெலங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் விஜய் தேவரகொண்டா மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “ரெட்ரோ விழாவில் நான் பேசியது மக்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை என்னுடைய கவனத்திற்கு வந்தது. எனவே இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் குறிவைத்து புண்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது. குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்களை நம் நாட்டின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறேன். பழங்குடியின மக்கள் குறித்த அவதூறு பேச்சு.... விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா!இந்தியா முழுவதும் ஒரே நாடு, நம் மக்கள் அனைவரும் சமம் என்ற ஒற்றுமையை குறித்து தான் நான் பேசினேன். நம் நாட்டுக்காக அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்திய நான் எப்படி எனது குடும்பமாகவும் சகோதரர்களாகவும் கருதும் மக்களுக்கு எதிராக பேசுவேன்? பழங்குடியினர் என்று நான் குறிப்பிட்ட வார்த்தை, முந்தைய காலத்தில் தனித்தனி குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்ந்து, அவர்கள் பெரும்பாலும் மோதலில் ஈடுபட்டு வந்ததை குறிக்க வரலாறு ரீதியாக மட்டுமே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். பழங்குடியின மக்களை குறிக்க இருபதாம் நூற்றாண்டின் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டு நூறு ஆண்டுகள் கூட முழுமை அடையாத பட்டியலின பழங்குடிகள் பற்றி குறிப்பிடவில்லை. பாரம்பரிய சமூகத்தில் குழுக்களாகவும், குடும்பங்களாகவும், மதம், சமூகம், பொருளாதாரம், ரத்த பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுவான கலாச்சாரம் மற்றும் பேச்சுவழக்கை உடைய சமூகப் பிரிவு என்பது தான் ட்ரைப் (பழங்குடியினர்) என்பதற்கு அர்த்தம். நான் பேசிய வார்த்தையில் ஏதேனும் தவறு இருந்தாலும் அல்லது யாரேனும் இதனால் காயப்பட்டிருந்தாலும் அதற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, ஒற்றுமை, செயல்பாடு பற்றி பேசுவது தான் என்னுடைய நோக்கம். மக்களை உயர்த்தவும் ஒன்றிணைக்கவும் தான் என் தளத்தை பயன்படுத்துகிறேன். ஒருபோதும் பிரிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ