Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' ட்ரைலரில் மறைமுகமாக தாக்கப்பட்டாரா ரஜினி?

‘இந்தியன் 2’ ட்ரைலரில் மறைமுகமாக தாக்கப்பட்டாரா ரஜினி?

-

- Advertisement -
kadalkanni

1996 இல் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் சங்கர், கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளது.'இந்தியன் 2' ட்ரைலரில் மறைமுகமாக தாக்கப்பட்டாரா ரஜினி? லைக்கா நிறுவனம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ஒரு சில காரணங்களால் தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இந்தியன் 2' ட்ரைலரில் மறைமுகமாக தாக்கப்பட்டாரா ரஜினி?அதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் ட்ரெய்லர் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். என்ன நிலையில் இந்த ட்ரெய்லரில் நடிகர் ரஜினி தாக்கப்பட்டுள்ளார் என்று யூட்யூப் பிரபலம் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது அந்த ட்ரெய்லரில் நடிகர் சித்தார்த், “சிஸ்டம் சரியில்லன்னு வாய் கிழிய பேசுவோம். ஆனா அதை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடறது இல்லை” என்று சொல்லி இருப்பார். இந்த வசனத்தை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன், தலைவர் தாக்கப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி கடைசி நேரத்தில் பின் வாங்கியதை சுட்டிக்காட்டி இந்த வசனம் இடம் பெற்றிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ