- Advertisement -
கைதி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் கார்த்தி. கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. இத்திரைப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருப்பார். படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லனாக அறிமுகமானார்.


மேலும், ஜார்ஜ் மரியான், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய இரண்டாவது படமான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. முழுக்க முழுக்க இரவு நேரத்தில் பயணிக்கும் இத்திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் நடிகர் கார்த்திக்கு மட்டுமல்லாமல், இயக்குநர் லோகிக்கும் திருப்பு முனையாக அமைந்தது. அவரை முன்னணி இயக்குநராகவும் முன்னிறுத்தியது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.



