Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படம் மங்காத்தாவை விட..... வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்னது என்ன?

‘தி கோட்’ படம் மங்காத்தாவை விட….. வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்னது என்ன?

-

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 'தி கோட்' படம் மங்காத்தாவை விட..... வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்னது என்ன?இவர் அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி வரும் நிலையில் விரைவில் படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது.'தி கோட்' படம் மங்காத்தாவை விட..... வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்னது என்ன? இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் அஜித் குறித்து பேசி இருக்கிறார். அதாவது நடிகர் அஜித், வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா படத்தை விட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் 100 மடங்கு பெரியதாக இருக்க வேண்டும் எனவும் நடிகர் விஜய்யை தான் இயக்குவது அஜித்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ