Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' பாடலில் இடம்பெற்ற 'Sawadeeka' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

‘விடாமுயற்சி’ பாடலில் இடம்பெற்ற ‘Sawadeeka’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. 'விடாமுயற்சி' பாடலில் இடம்பெற்ற 'Sawadeeka' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக அஜித், திரிஷா கூட்டணி இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான டீசரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. அடுத்தது நேற்று இந்த படத்தில் இருந்து ‘Sawadeeka’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 'விடாமுயற்சி' பாடலில் இடம்பெற்ற 'Sawadeeka' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?இந்த பாடலில் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதில் Sawadeeka என்ற வார்த்தைக்கு ‘Welcome‘ என்பது தான் அர்த்தமாம். இந்த வார்த்தையை மலேசிய மக்கள் பயன்படுத்துவார்கள். அடுத்தது ‘Kapunkaa‘ என்றால் Go என்று அர்த்தம். இது தாய்லாந்து மொழியாகும். இந்த பாடலை அனிருத் மற்றும் ஆண்டனி தாசன் ஆகிய இருவரும் இணைந்து பாடியிருந்த நிலையில் அறிவு இந்த பாடல் வரிகளை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ