தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படம் தனுஷின் 52ஆவது படமாகும். இதனை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும் கிரண் கௌசிக் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
மேலும் இன்று (செப்டம்பர் 20) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதாவது படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு போஸ்டர்களையும் பார்க்கும்போது படத்தின் கதை குறித்த எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. ஆனால் தனுஷ் இரண்டு விதமான கெட்டப்புகளில் காணப்படுகிறார். ஆகையினால் தனுஷ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது தவிர சமீபத்தில் வெளியான ‘என் பாட்டன்’ பாடலை பார்க்கும்போது கிராமத்தில் இருக்கும் தனுஷ் அப்பாவாக இருக்கலாம் என்றும், கோட் சூட்டில் நகர்ப்புறத்தில் இருக்கும் தனுஷ் மகனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் கதை இதுதான் என்ற தெளிவான ஒரு விளக்கம் கிடைக்கவில்லை. இன்று வெளியாகும் ட்ரெய்லரில் இப்படத்தின் கதையை கணிக்க முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் விதமாக படக்குழு தற்போது புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிராமப்புற கெட்டப்பில் தனுஷ் சைக்கிளில் வருகிறார். ஆனால் அவருக்கு முன்பாக பரவிக் கிடக்கும் தண்ணீரில் நகர்ப்புறம் காட்டப்படுகிறது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -