நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே அப்பாவித்தனமான இளைஞனாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார் விஷ்ணு விஷால். மேலும் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முக்கிய நடிகராகவும் உருவெடுத்துள்ளார். அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன், ஓஹோ எந்தன் பேபி போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. ஓர் மாம்பழ சீசனில், VV21 என பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால். இவ்வாறு தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், நேற்று (ஜூலை 17) தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாளுக்கு இவர் நடித்துள்ள படங்களிலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கூடுதல் சிறப்பாக மாற்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கின்றனர். அதாவது விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்தி பல உயிர்களை காக்க இரத்த தானம் வழங்கினர். மேலும் ஏழை எளிய குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -