நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படத்திற்காக நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டார். இருப்பினும் இந்த படம் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது 45 வது படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் நடிகர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக இருக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மதுரையில் தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2025 மாட்டுப் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -