கான்ஜுரிங் கண்ணப்பன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகரான சதீஷ், விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வந்தவர். அதே சமயம் இவர் நாய் சேகர், வித்தைக்காரன் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் எனும் திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சதீஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தினை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே அதைத் தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக நடிகர் சதீஷ் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படம் தொடர்பான முன்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.