Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தின் ஷூட்டிங் எப்போது?

‘சூர்யா 44’ படத்தின் ஷூட்டிங் எப்போது?

-

சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 'சூர்யா 44' படத்தின் ஷூட்டிங் எப்போது?இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 43வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி சூர்யாவின் 43 வது படத்தை சுதா கொங்கரா இயக்க படத்திற்கு புறநானூறு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.'சூர்யா 44' படத்தின் ஷூட்டிங் எப்போது? இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் கூடுதல் தகவலாக சூர்யா 44 படப்பிடிப்பு ஜூன் 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ