Homeசெய்திகள்சினிமா'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். நடிகர் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நிலையில் மூன்றாவதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகின்ற பிப்ரவரி 21 அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?அதிலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ