spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்ரனை சீண்டிய அந்த நடிகை யாராக இருக்கும்?

சிம்ரனை சீண்டிய அந்த நடிகை யாராக இருக்கும்?

-

- Advertisement -

1990 காலகட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். சிம்ரனை சீண்டிய அந்த நடிகை யாராக இருக்கும்?இவர் கமல், விஜய், விஜயகாந்த், அஜித், சூர்யா, பிரசாந்த், சரத்குமார் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரன் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இது தவிர இடுப்பை வளைத்து நெளித்து இவர் ஆடும் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான குட் பேட் படத்தில் கூட இவர் நடனமாடியிருந்த ‘சுல்தானா’ பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் சிம்ரனை போல் உடைய அணிந்து ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக சப்தம், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருந்தார் சிம்ரன். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் நடிகை ஒருவர் தன்னை சீண்டியதாக கூறியிருக்கிறார். அதன்படி அவர், “சமீபத்தில் என்னுடைய ஃபீமேல் கோ ஆக்டர் ஒருவருக்கு, அந்த ரோலில் உங்களை பார்த்தது எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது என மெசேஜ் அனுப்பினேன்.

அதற்கு அவர், ஆன்ட்டி ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது என்று எனக்கு பதில் கொடுத்தார். அவரிடமிருந்து இப்படி ஒரு புரிதல் இல்லாத பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. என்னைப் பொருத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான ஆன்டி ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் அதை செய்திருக்கிறேன்” என்று பேசி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிம்ரனை சீண்டிய அந்த நடிகை யாராக இருக்கும்? என பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

MUST READ