நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுரூஷ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராமாயண இதிகாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஸ்ரீராமனாகவும், நடிகை ஆலியா பட் சீதையாகவும் நடிக்க இருக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
மேலும் இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎஃப் படத்தின் ஹீரோ யாஷ் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள யஷ், எதிர்மறை கதாபாத்திரத்தில் தான் நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அதனால் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பான மற்ற தகவல்கள் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.