spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயோகி பாபு, வேதிகா கூட்டணியில் உருவாகும் 'கஜானா'..... டீசர் வெளியீடு!

யோகி பாபு, வேதிகா கூட்டணியில் உருவாகும் ‘கஜானா’….. டீசர் வெளியீடு!

-

- Advertisement -

யோகி பாபு, வேதிகா கூட்டணியில் உருவாகியுள்ள கஜானா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.யோகி பாபு, வேதிகா கூட்டணியில் உருவாகும் 'கஜானா'..... டீசர் வெளியீடு!நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தி விடுகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் தூக்குதுரை திரைப்படம் வெளியானது. இந்நிலையில் முனி, காஞ்சனா 3, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த வேதிகாவுடன் இணைந்து கஜானா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வேதிகா மற்றும் யோகி பாபு உடன் இணைந்து சென்ட்ராயன், இனிகோ பிரபாகரன், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபதீஷ் சாம்ஸ் இயக்கியுள்ள நிலையில் ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

we-r-hiring

அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைத்துள்ளார் வினோத் ஜே பி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் கே எம் ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் பேண்டஸி அட்வென்சர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த டீசரின் இறுதியில் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை வேதிகா பாபி சிம்ஹாவுடன் இணைந்து ரஸாக்கர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ