Homeசெய்திகள்சினிமாஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் யோகி பாபு!

ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் யோகி பாபு!

-

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினி, சூர்யா, ஷாருக்கான், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மாவீரன், ஜவான், கங்குவா, ஜெய்லர், எல் ஜி எம், உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்திருந்த தூக்குதுரை படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் யோகி பாபு ‘மிஸ் மேகி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த லதா இயக்குகிறார். லதா ஆர் மணியரசு எழுதி இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது. படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் இசையமைக்கிறார்.ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கிறார். ஆத்மிகா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ