Homeசெய்திகள்சினிமாகடைசி வரை காமெடியன் தான்.... காமெடியன் என்பதை விட்டுக் கொடுக்க மாட்டேன்.... நடிகர் யோகி பாபு!

கடைசி வரை காமெடியன் தான்…. காமெடியன் என்பதை விட்டுக் கொடுக்க மாட்டேன்…. நடிகர் யோகி பாபு!

-

நகைச்சுவை நடிகரான யோகி பாபு , ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் ,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதே சமயம் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள லக்கி மேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் லக்கி மேன் படம் சம்பந்தமான செய்தியாளர்கள் சந்திப்பில், ” என் வாழ்க்கையில் நான் அன்லக்கியாக தான் இருக்கிறேன். மடோன் அஸ்வின், பாலாஜி, உள்ளிட்ட இயக்குனர்களால் தான் லக்கி மேன் ஆனேன். 23 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். பொதுவாக என்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நான் நடிப்பதில்லை. அவர்களின் கஷ்டங்களை கேட்டு தான் நடிக்கிறேன். சில இயக்குனர்கள் எனக்கு நல்ல படம் கொடுத்து இருக்கிறார்கள். காமெடியானாக தான் எனது நடிப்பு தொடங்கியது. நல்ல கதை இருந்தால் ஹீரோவாக நடிப்பேன். இல்லையென்றால் கடைசி வரை காமெடியனாக தான் இருப்பேன். எதற்காகவும் காமெடியன் என்பதை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ