Homeசெய்திகள்சினிமாதமிழ்ல அடித்து நொறுக்கியாச்சு... மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் யோகிபாபு!

தமிழ்ல அடித்து நொறுக்கியாச்சு… மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் யோகிபாபு!

-

நடிகர் யோகிபாபு மலையாளத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் யோகி பாபு காமெடியனாக இல்லாமல் படங்களே வெளியாகாது என்ற நிலை இருந்து வந்தது.

தற்போது முழுக்க முழுக்க கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் யோகி பாபு. தமிழில் அடித்து தூள் கிளப்பிய அவர் தற்போது மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிரித்வி ராஜ் மற்றும் பாசில் ஜோசப் நடிப்பில் உருவாகி வரும் ‘குருவாயூர் அம்பல நடாயில்’ என்ற படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஆன ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

யோகிபாபு மலையாளத்தில் இணைந்ததை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ