Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க... மேஜிக் கலைஞரிடம் பயிற்சி...

யோகி பாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க… மேஜிக் கலைஞரிடம் பயிற்சி…

-

- Advertisement -
kadalkanni
ஜோரா கைய தட்டுங்க திரைப்படத்திற்காக நடிகர் யோகிபாபு, மேஜிக் கலைஞர் ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.

திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் பூமர் அங்கிள், மிஸ்மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இறுதியாக மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து வானவன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து ஜோரா கைய தட்டுங்க என்ற திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை மது வினீஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பாக, தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலம் அடைந்தார்.
தற்போது உருவாகி வரும் ஜோரா கைய தட்டுங்க திரைப்படத்தில், நடிகை யோகி பாபு மேஜிக்மேனாக நடிக்கிறார். இதற்காக, மேஜிக் கலைஞர் ஒருவரிடம் யோகி பாபு முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டாராம். இத்திரைப்படத்தில், யோகிபாபுவுடன் இணைந்து,அருவி பாலா, ஹரீஷ் பேரடி, மேனகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.

MUST READ