விஜய் நடிக்கும் தி கோட்… படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு…
- Advertisement -
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தி கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டு டப்பிங் பணிகளும் முடிவடைந்தன.
இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை, பிரபல ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் உரிமையை ஜீதமிழ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.