- Advertisement -
முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் குவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தற்போது மும்பையில் பிராட்வே என்ற பெயரில் பிரம்மாண்டமான கலாச்சார மையம் ஒன்றை நிறுவியுள்ளார். இந்தியாவின் மிகவும் பிரம்மாண்டமான தியேட்டராக இது உருவாகியுள்ளது.


இந்த கலாச்சார மையம் 2000 பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் கொண்டுள்ளன. மேலும் 8000 LED விளக்குகள் கொண்டு கண்கவரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் திறப்பு விழாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹோலந்த் மற்றும் நடிகை ஜெண்டாயா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.