உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் சாக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கண்டிவாலி கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி பள்ளி. இப்பள்ளியில் 16 வயது சிறுமி படித்து வருகிறார். அவருக்கு உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் தாக்கில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர்.
பலமுறை இதைப்பற்றி தனது பெற்றோரிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் மாணவி . இதை அடுத்து பெற்றோர் ஆவேசம் கொண்டு மும்பை சம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். உடற்கல்வி ஆசிரியர் மீது கோக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ஐபிசி 354 ,போக்சோ சட்டங்களில் வழக்குப்பதிவு செய்து கண்டிவாலி பகுதியில் இருந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.