தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து வரி ஏய்ப்பு செய்யும் வகையில் கூலிங் சீட் என்ற பெயரில் சுமார் 1 ½ கோடி மதிப்பிலான சுமார் 16 டன் கொட்டைப்பாக்கை கடத்திய வில்லியம் பிரேம்குமார் மற்றும் அய்யனார் ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு வரி எய்ப்பு செய்யும் வகையில் வரி அதிகமாக உள்ள பொருட்களை வரி குறைவாக உள்ள பொருட்களை கொண்டு வருவதாக மோசடி செய்து இறக்குமதி செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள கொட்டை பாக்கு அதிக அளவில் இவ்வாறு மோசடியாக கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து மோசடியாக கொட்டைப்பாக்கு கடத்தி வருவதாக வந்த தகவலை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டெய்னர் பெட்டிகளை சோதனை செய்தனர்.
இதில் தூத்துக்குடி மில்லர் புரத்தைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வில்லியம் பிரேக்குமார் என்பவருக்கு சொந்தமான ஷிப்பிங் நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து கூலிங் சீட் என்ற பெயரில் சுமார் ஒன்றை கோடி ரூபாய் மதிப்புள்ள 16 டன் கொட்டைப்பாக்கை முறைகேடாக இறக்குமதி செய்திருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட அய்யனார் மற்றும் வில்லியம் பிரேம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்படும் இந்த கொட்டைப்பாக்குகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.