Homeசெய்திகள்க்ரைம்2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!

2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று கொடுத்ததில் சுய உதவிக்குழு தலைவிகள் 16 லட்சம் மோசடி செய்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பஞ்செட்டி கிராமத்தில் 24 ஆண்டுகளாக ஆனந்தவள்ளி மகளிர் குழு, அம்மன் மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. அம்மன் மகளிர் குழு  சார்பில் பொன்னேரி தாலுக்கா பண்டிகாவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு  அன்று கூட்டுக் கடனாக ரூ. 20 லட்சம் பெற்றுள்ளனர்.

2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!அதே போல் ஆனந்தவள்ளி மகளிர் குழு பெயரிலும் ரூ. 20 லட்சம் என  இரண்டு குழுக்கள் மூலமாக மொத்தம் ரூ.40 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். அதனை ஒரு குழுவில் உள்ள 12 உறுப்பினர்கள் என 2 குழுவிலும் உள்ள 24 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.24 லட்சம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 16 லட்சத்தை சுரேகா மற்றும் அவரது தாயார் ஜோதி மற்றும் கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் ராஜா ஆகியோர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து 24 உறுப்பினர்களும் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை குழு தலைவி சுரேகாவிடம்  செலுத்தி முழுமையாக கட்டி உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்தவள்ளி மகளிர் குழு துணைத் தலைவி பரிமளா என்பவர் தனது சொந்த தேவைக்காக கடன் வேண்டி பண்டிகாவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது வாங்கி அதிகாரிகள் சுய உதவிக்குழு மூலம் வாங்கிய கடன் முழுமையாக திருப்பி செலுத்தாமல் பாக்கி உள்ளதாகவும் பிரதிமாதம் செலுத்திய தவணைத் தொகையையும் வங்கியில் செலுத்தவில்லை எனவும் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஆனால் இதற்கு முன்னர் பணம் செலுத்தாதது குறித்து அவர்களுக்கு வங்கியிலிருந்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

அதனால் சந்தேகம் அடைந்த பரிமளா கடந்த ஜனவரி மாதம் சுரேகா மற்றும் ஜோதியிடம் கேட்டதற்கு ரூ. 24 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டு அந்த பணத்தை வங்கியில் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் ரூ.1 லட்சம் வட்டி மட்டும் கட்டியதால் அசல் பணத்தை கட்டச் சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் கேட்டதற்கு சுரேகா மற்றும் அவரது தாயார் ஆகியோர் பரிமளாவை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பணத்தை செலுத்த முடியாது உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என மிரட்டும் தொனிலும் பேசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழுவில் உள்ள பெண்களின் ஆதார் எண்ணை வைத்து மற்ற வங்கிகளிலும்  கடன் தொகை பெற முயற்சித்ததும்  மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தெரிய வந்துள்ளது.

எனவே 2 மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயரில் கடன் வாங்கியதில் 16 லட்சம்  லட்சம் வரை மோசடி செய்ததோடு மற்ற வங்கிகளிலும்  அவர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கடன்பெற முயற்சி செய்த சுரேகா மற்றும் அவரது தாயார் ஜோதி மற்றும் முன்னாள் வங்கி செயலாளர் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை கடன் பெற்ற வங்கியில் கட்டக் கோரி  பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  பிரதாப் மற்றும் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

MUST READ