spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி... பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது

பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி… பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு மாணவரை நரபலி கொடுத்த பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் ரஸ்காவனில் டிஎல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் டெல்லியை சேர்ந்த மென்பொறியாளர்  கிரிஷண் குஷ்வாஹா என்பவரின் மகன் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலின் பேரில் மாணவரின் தந்தை பள்ளிக்கு வந்து பார்த்தபோது மாணவரை காணவில்லை. இதனால் சந்தேகம்அடைந்த கிரிஷண் குஷ்வாஹா காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

we-r-hiring

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளியின் இயக்குநரான தினேஷ் காரில் சடலமாக கிடந்த மாணவரை மீட்டுள்ளனர். பின்னர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் மாணவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், அவர் முதல் நாள் இரவே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பள்ளி இயக்குநர் தினேஷ் உள்ளிட்டோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், புகழ்பெற வேண்டி நடத்திய பூஜைக்காக, மாணவரை நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், மற்றொரு மாணவரையும் அவர்கள் நரபலி கொடுக்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, பள்ளி இயக்குநர் தினேஷ், 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ