spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் - 3 பேர் கைது

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் – 3 பேர் கைது

-

- Advertisement -

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் - 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இதை தொடர்ந்து தம்பதியினர் வேலை விஷயம் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து இடம்பெயர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்து உதகை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

we-r-hiring

தம்பதியின் மகள் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கு மார்க்கெட்டில் டிரைவராக பணியாற்றும் தொட்டபெட்டாவை சேர்ந்த யுவராஜ் என்ற ஹரிஷ் அறிமுகமாகி இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் காதலர்களிடையே பிரச்சினை ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து மாணவி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவியின் உறவினர் வீட்டு விசேஷம் சம்பந்தமாக மாணவியின் தந்தை சொந்த ஊர் சென்று விட்டார். மாணவியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார்.

தன்னுடைய தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை என்பதால், தாயார் இதுகுறித்து தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது முகநூல் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதும், பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதும் தெரிய வந்தது. இதனால் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே காதலித்து வந்த ஹரிஸ் (21) என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர் மட்டுமல்லாமல், சிறுமியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் சிறுமியிடம் பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் காதலன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா, ஊட்டியை சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டியை சேர்ந்த பிரவீன் (19), பெந்தட்டியை சேர்ந்த பிரேம்குமார் (24) உள்பட 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். இதேபோல் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட பல இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக பலரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது

MUST READ