spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

-

- Advertisement -

இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற, ஐந்து பேர் பெங்களூருவில் கைது.

போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைதுபெங்களூரு நகரில் நுர்பதுங்கா சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற, ஐந்து பேர் கொண்ட மோசடி கும்பலை, ஹலசுரு கேட் போலீசார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்களில் 4 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் கேரளாவில் உள்ள காசர்கோட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது2023 மே மாதம் ரூ.2,000 கரன்சி நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் இந்த ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, பெல்லாரியை  சேர்ந்த அப்சல் உசேன் (29) பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்தை ரூ.24.68 லட்சம் மதிப்புள்ள 1,234 ரூபாய் நோட்டுகளுடன் ரூ.500 நோட்டுகளாக மாற்றுவதற்காக அணுகினார். வங்கி அதிகாரிகள், கரன்சிகளை சரிபார்த்ததில், அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.

சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

உடனடியாக வங்கி அதிகாரிகள் அப்சல் மற்றும் போலி நோட்டுகளை ஹலசுரு கேட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை அப்சலுக்கு போலியான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த மேலும் நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.

மத்திய குற்ற பிரிவு போலீஸார் குழு காசர்கோடு சென்று அங்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை கைது செய்து, கரன்சி அச்சிடும் இயந்திரம், ரூ.29 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் கரன்சி பேப்பர்களை பறிமுதல் செய்தனர். மொத்தம், 54 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துதல் (பிஎன்எஸ் 179) மற்றும் போலி நோட்டுகளை வைத்திருந்தது (பிஎன்எஸ் 180) ஆகிய பிரிவுகளின் கீழ் ஹலசுரு கேட் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ