spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பாம்பு கடித்து இறந்த அரசு ஊழியரின் மரணத்தில் திருப்பம்... ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக மகன்களே...

பாம்பு கடித்து இறந்த அரசு ஊழியரின் மரணத்தில் திருப்பம்… ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்!

-

- Advertisement -

திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக பெற்ற தந்தையை, மகன்களே கொடிய விஷ பாம்புகளை விட்டு கடிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கணேசனுக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் மோகன்ராஜ், நெசவுத் தொழில் செய்து வருகிறார். இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை, கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, கணேசன் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கட்டுவிரியன் பாம்பு கடித்து தனது தந்தை இறந்ததாக மோகன்ராஜ் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, கணேசன் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் 3 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இறப்புக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் சாதாரண ஆய்வாக உதவியாளராக பணியாற்றி வருபவர் மீது ரூ.3 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், காப்பீடு செய்யப்பட்ட நிலையில் மரணம் அடைந்ததவருக்கு பெருந்தொகை இறந்தவர் குடும்பத்திற்கு வழங்க வேண்டி இருப்பதால் காப்பீட்டு நிறுவனத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பீடு நிறுவனம் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஐ.ஜி உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா, தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தினர் மற்றும் அவரது மகன்களிடம் கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில், சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாரையே அதிரவைத்துள்ளது.

அதிகம் கடன் இருந்ததால் கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும். அதோடு நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என கணேசனின் இரு மகன்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் பாம்பு கடித்து இறந்ததாக நம்பவைக்க திட்டம் தீட்டி மூத்த மகன் மோகன் ராஜ், தனது நண்பர் பாலாஜி என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

பாலாஜியின் நண்பர் பிரசாந்த் என்பவரை, அவரது மனைவியின் தந்தை தினகரன் என்பவர் மூலம் மணவூர் பகுதியில் உள்ள காட்டில் நல்ல பாம்பை பிடித்துவந்து, கணேசனின் காலில் கடிக்க விட்டுள்ளனர். ஆனால் அதனால் கணேசனுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை. எனவே மீண்டும் ஒரு வாரம் கழித்து கொடிய விஷம்கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடித்து சாக்குப் பையில் அடைத்து, பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டிற்கு கொண்டுசென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணேசனின் கழுத்துப் பகுதியில் பாம்பை மூன்று முறை கடிக்க வைத்துள்ளனர்.

இரண்டு வருடமாக +2 மாணவிக்கு காதல் தொல்லை…52 வயது முதியவர் கைது

சிறிது நேரத்தில் கணேசன் இறந்ததை உறுதிசெய்து கொண்ட பின்னர் வீட்டினுள்ளேயே கட்டு விரியன் பாம்பை அடித்துக்கொன்று தங்களது தந்தையை பாம்பு கடித்துள்ளதாக கூறி நாடகமாடி இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனையில் பாம்பு கடித்ததால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்காக கூலிப்படைக்கு ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். பாம்பைவிட்டு கடிக்க வைத்திருப்பதை ஆதாரங்களுடன் காவல்துறையினர் கண்டறிந்ததை அடுத்து கணேசன் கொலைக்கு சதித் தட்டம் தீட்டிய, அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், பைக் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ