Homeசெய்திகள்க்ரைம்பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி...!

பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி…!

-

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி...!கல்லூரி காலத்தில் இருந்து தன்னுடன் பயின்று வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், கல்லூரியில் படிக்கும்போது தன்னை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்ததால் அவருடன் நெருக்கமாக இருந்த போது புகைப்படம் வீடியோக்களை எல்லாம் அவர் எடுப்பதற்கு அனுமதித்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண் கருவுற்றதால் இதுகுறித்து தனது காதலன் அருண்குமாரிடம் கூறிய போது அவர் கருவை கலைத்து விட வற்புறுத்தியதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி கட்டாயப்படுத்தி பப்பாளி பழ ஜூஸை வாங்கி கொடுத்து தனது கருவை கலைத்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி...! மேலும் இது குறித்து வெளியில் தெரிவித்தால் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் கைது

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம் புகார் உண்மை என தெரியவரவே தேனாம்பேட்டைச் சேர்ந்த அருண்குமார் என்ற நபரை கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அருண்குமார் மீது கட்டாய கருக்கலைப்பு, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ