ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்.
28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு;ரௌடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் தனிப்படை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் போலீஸார் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பிரபல ரவுடிகள், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில், ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை செய்தவர் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூருவில் தனிப்படை போலீஸார் கைது செய்தது. அப்போது அவரிடம் புதூர் அப்பு குறித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு விநியோகித்த விவகாரத்தில் ரவுடி புதூர் அப்புவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடி அப்பு மீதும் குண்டாஸ் பாய்ந்தது.