Homeசெய்திகள்க்ரைம்ஏடிஎம் கொள்ளையர்கள் இவர்கள்தானா? மேட்ச் ஆகவில்லை என்று வெளிமாநில போலீசார் தகவல்

ஏடிஎம் கொள்ளையர்கள் இவர்கள்தானா? மேட்ச் ஆகவில்லை என்று வெளிமாநில போலீசார் தகவல்

-

- Advertisement -

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட பெயர் விலாசம் குறித்த ஆவணங்கள் மற்ற மாநில போலீசார் விசாரணையில் முரண்பாடாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் …

ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 7பேர் கொண்ட கும்பலில் ஒருவரை என்கவுண்டர் செய்து 6 பேரை தமிழ்நாடு போலீசார் கடந்த 27ம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து காவல்துறையினர் பெயர்,முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் கொள்ளையர்கள் குறித்தும் கேரளா, ஆந்திர, தெலுங்கானா,கர்நாடகா உள்ளிட்ட மாநில போலீசார் விசாரணை நடத்த வரும் போது நமது போலீசார் சொல்லும் குற்றவாளிகள் குறித்த ஆவணங்களுக்கும் வெளிமாநில போலீசார் ஏடிஎம் கொள்ளை குறித்து வைத்திருக்கும் தகவல்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்… மேலும் இவர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி மாநிலங்களுக்கு மாநிலம்  பெயர்களை மாற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடப்பா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெப்பரை போன்ற ஊர்களில் இருந்து அதே SBI ஏடிஎம்களில் கொள்ளை போயிருந்ததால் அங்கு கொள்ளையடித்த குற்றவாளிகள் இவர்கள்தானா என்ற கோணத்தில் விசாரிப்பதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரிய பிரகாஷ் மற்றும் கான்ஸ்டபிள் விஜய் ஆகியோர் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள்…. இவர்கள் கொள்ளையடித்த ஏடிஎம் அனைத்திலும் இரவு காவலர்கள் இல்லை, இரவு 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாகவே கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

மாநிலம் விட்டு மாநிலமாக ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில் தமிழக போலீசார் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்தது பல்வேறு மாநில போலீசார் களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

MUST READ