spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

-

- Advertisement -

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் நகை வியாபாரி. நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிசைன்களை ஆர்டர் எடுத்து, அதனை பொற்கொல்லர்களிடம் கொடுத்து நகை செய்து கொடுப்பார்.

we-r-hiring

இந்த நிலையில் வியாபாரம் தொடர்பாக நேற்று காலை காஞ்சிபுரம் சென்று விட்டு சென்னை கோயம்பேடுக்கு நேற்று இரவு பேருந்தில் திரும்பினார். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார்.

அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெரு அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், ராஜேஷ்குமார் ஜெயினின் வாகனத்தை இடித்து கீழே தள்ளினர்.

பின்னர் அவர் வைத்திருந்த பையை பறித்து சென்றனர். அந்த பையில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும், 430 கிராம் தங்க நகைகள் இருந்ததா புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜேஷ் குமார் ஜெயின் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ராஜேஷ் குமார் ஜெயினின் வியாபார விவரங்களை நன்கு அறிந்த நபர்கள் அவரை பின்தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

MUST READ