spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

-

- Advertisement -

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தையை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை சாலையில் வீசி கொலை செய்த அவரது தந்தையிடம் சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் விக்கி என்ற விக்னேஷ் வயது(24). தேங்காய் உரிக்கும் தொழிலாளியான இவருக்கும் நாகசக்தி வயது(21) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று விஷால் என்ற 1 வயது ஆண் குழந்தையும், நிதின்யா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

வசூலில் அடித்து தூள் கிளப்பும் ‘மகாராஜா’…… விரைவில் 100 கோடியை நெருங்குகிறதா?

இந்நிலையில் விக்கி அடிக்கடி போதையில் வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் இதேபோன்று தகராறு ஏற்பட்டதால் விக்கியின் மனைவி நாகசக்தி தனது இரண்டு குழந்தைகளையும் அருகில் உள்ள தனது பாட்டி காளியம்மாள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாட்டி வீட்டுக்கு சென்ற விக்னேஷ்  போதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு உள்ளார். சண்டையிடும் போது வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தை நிதின்யாவை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை

இதில் காயமடைந்த 8 மாத குழந்தையை உடனடியாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி கொடுத்த பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து   குழந்தையின் தந்தை விக்கி என்ற விக்னேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ