spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி

மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி

-

- Advertisement -

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகையன்/61. இவரது மகன் தினேஷ் குமார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியைச் சேர்ந்த சபரி/36, சென்னை போரூர், டி.வி.ஏ கோயில் தெருவைச் சேர்ந்த ஷாம் கிதியோன்/38 ஆகியோர் முருகையனை சந்தித்து அவரது உறவினர்களின் நண்பர்கள் எனக் கூறி அறிமுகமானவர்கள்.

we-r-hiring

பின்னர் அவர்கள் இருவரும் தினேஷ்குமார் நீட் தேர்வில் 116 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாகவும் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்க ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி முருகையனிடம் வாக்குறுதி அளித்தனர்.

மேலும், அவர்கள் இருவரும் முருகையனிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, அவரது மகனுக்கு கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு இடம் வாங்கி தராமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர்.

இது குறித்து முருகையன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சபரி, ஷாம் கிதியோன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

MUST READ