Homeசெய்திகள்க்ரைம்வெளிநாட்டு பயணியிடம் திருடிய பணத்தில் கைவரிசை... பெண் எஸ்.ஐ. இடம் தீவிர விசாரணை!

வெளிநாட்டு பயணியிடம் திருடிய பணத்தில் கைவரிசை… பெண் எஸ்.ஐ. இடம் தீவிர விசாரணை!

-

- Advertisement -

சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த வெளி நாட்டு பயணியிடம் அமெரிக்க டாலர்களை திருடிய ஊழியரிடம் மீட்ட பணத்தை கையாடல் செய்த புகாரில் பெண் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குஸ்டவ் எரிக், அவரது மனைவி யெம்ஜி எரிக் ஆகியோயர் கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் இயங்கி வரும் தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி காலை அனைவரும் வெளியே சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பியபோது, அறையில்  வைத்திருந்த  20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் திருட்டு போய் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் விடுதி மேலாளர் வாலித்தேவன், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!
US Dollar

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார், விடுதியில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விடுதியில் ரூம் பாயாக பணிபுரிந்த திரிபுராவை சேர்ந்த மெஹதி ஹுசைன் என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த மெஹந்தி உசைனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 2 மாதங்களாக தனியார் விடுதியில் பணியாற்றி வந்த மெஹதி உசேன் நோட்டமிட்டு ஸ்பேர் சாவி மூலமாக வெளிநாட்டு டாலர்களை திருடியுள்ளார். பின்னர் திருடிய பணத்தில் 17,900 டாலரை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மணி எக்சேஞ்ச் நிறுவனத்திற்கு கொண்டுசென்று, இந்திய ரூபாயாக மாற்றித்தருமாறு கூறியுள்ளார். எனினும் இவ்வளவு பெரிய தொகையை மாற்றக்கூறியதால் சந்தேகமடைந்த மணி எக்சேஞ்ச் உரிமையாளர் சிவகுமார், இது யாருடைய பணம் என மெஹதி ஹுசைன் கேட்டுள்ளார். அப்போது, தாம் ரூம் பாயாக பணியாற்றி வருவதாகவும், கஸ்டமர் ஒருவர் இதனை கொடுத்து மாற்றி வர சொன்னதாகவும் கூறியுள்ளார்.

எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லாததால், மணி எக்சேஞ்ச் உரிமையாளர் சிவக்குமார் இது தொடர்பாக வடபழனி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் மெஹந்தி உசேனை விசாரித்து அனுப்பி வைத்துவிட்டு, பணத்தை மணி எக்ஸ்சேஞ்ச் உரிமையாளரிடமே வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். மெஹதி உசேன் மீண்டும் பணத்தை கேட்டு வந்தபோது, உதவி ஆய்வாளர் அவரை மிரட்டும் தொனியில் பேசி செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளார்.

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
File Photo

இந்நிலையில்,  அன்று இரவு மணி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் என்பவர், கடையின் உரிமையாளர் சிவகுமாரிடம் சூளைமேடு பகுதியில் 20 ஆயிரம் டாலர் பணம் திருடு போயிருப்பதாகவும், நமது கடையில் வெளி நாட்டு பணத்துடன் யாராவது மாற்ற வந்துள்ளார்களா என்று கேட்டுள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட உரிமையாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் புவனேஷ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில், உதவி ஆய்வாளர் புவனேஷ்வரி சூளைமேடு விடுதிக்கு சென்றபோது, அங்கு சூளைமேடு காவல் ஆய்வாளர் இருந்துள்ளார். அவரிடம் தங்கள் பகுதி மணி எக்ஸ்சேஞ் நிறுவனத்தில்  ஒருவர் 16,500 டாலர் மாற்ற வந்ததாகவும், தாங்கள் பிடித்து கடை உரிமையாளரிடமே பணத்தை கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறி, சூளைமேடு ஆய்வாளரிடம் 16,500 டாலர் பணத்தை கொடுத்துள்ளார்.

இதனிடையே, திருடு போன 20,000 ஆயிரம் டாலரில், 16,500 டாலர்கள் மட்டும் கிடைத்ததால் சந்தேகம் அடைந்த சூளைமேடு போலிசார்,  இது தொடர்பாக மணி எக்சேஞ்ச் கடை உரிமையாளர் சிவக்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மெஹதி ஹுசைன் 17,900 டாலர் பணம் கொண்டுவந்ததாகவும், ஆனால் உதவி ஆய்வாளர் புவனேஷ்வரி 16,500 டாலர் பணத்தை மட்டும் கொடுக்க கூறியதாகவும், மீதமுள்ள பணமான 1400 டாலர்களை பணம் பரிமாற்றம் செய்யும் மணிகண்டனிடம் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து உயர் அதிகாரிகளிடம் எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் இருந்ததும், மீதமுள்ள 1400 டாலர் பணத்தை தனக்கு பழக்கமான பண பரிமாற்றம் செய்யும் மணிகண்டனிடம் கொடுக்கக் கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ