spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - கூலி தொழிலாளி கைது

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது

-

- Advertisement -

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

we-r-hiring

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - கூலி தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நாகபந்தல் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ். கூலித்தொழிலாளியான இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - கூலி தொழிலாளி கைது

மேலும் சிறுமி தனது பாட்டியுடன் ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சுபாஷ் அங்கிருந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்களிடம் சுபாஷ் போன் செய்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ