spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள்

புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள்

-

- Advertisement -

புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார்.

புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள்
புதுவண்ணாரப்பேட்டை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழரசன் நேற்றிரவு வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள மதுபானக்கடைக்கு மது அருந்த சென்ற போது அங்கு  இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மது அருந்துவிட்டு வெளியே வந்த தமிழரசனை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பியோடினர்.

we-r-hiring

ரத்த வெள்ளத்தில் இருந்த தமிழரசனை  பார்த்து பொதுமக்கள் புதுவண்ணாரப்பேட்டை போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து  புதுவண்ணாரப்பேட்டை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு கைகள் தலையில் பல வெட்டுகள் என பலத்த காயத்தோடு உள்ள தமிழரசனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டுப்பட்ட தமிழரசன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்கு  மற்றும் கொலை முயற்சி உட்பட்ட 8 வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெட்டி விட்டுசென்ற மர்ம நபர்களுக்கும் தமிழரசனுக்கும் ஏற்கனவே முன்விரோத பகை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ